பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 15, 2021

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎச்எம்என்என் ஹேரத், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை  (ஓய்வு)  இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஹேரத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.