இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமை பொறுப்பேற்பு

ஜனவரி 19, 2021

இலங்கை இராணுவத்தின் 57ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஜன. 18) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் அதிகாரியான இவர், இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவியான பிரதம அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட முன்னர் யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதியாக சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது 35 ஆண்டு சேவைக் காலத்திற்குள் இராணுவத்தில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்து வந்த மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, 2015 முதல் 2017 வரையான காலப்பகுதியில் பாகிஸ்தான், இஸ்லாமாபாத்திலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றியுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்கும் நகழ்வில் கலந்து கொண்ட பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.