25 மில்லியன் ரூபா பெறுமதியான முகக்கவசங்கள் மற்றும் ரெபிட் எண்டிஜென் டெஸ்ட் தொகுதிகள் இராணுவத்தினருக்கு கையளிப்பு
ஜனவரி 20, 2021கொவிட்-19 பரவலை தடுக்கும் வகையில் முன்னணியிலிருந்து செயற்படும் முப்படைவீரர்களது செயற்பாடுகளை பாராட்டி இரண்டு கொரிய நிறுவனங்களினால், முககவசங்கள் மற்றும் ரேபிட் ரெபிட் எண்டிஜென் டெஸ்ட் பரிசோதனை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
ஐஎம்இ கொரியா மற்றும் எஸ்டி பயோசென்சார்ஸ் நிறுவனங்கள் அண்மையில் தங்கள் உள்நாட்டு பங்காளிகள் மூலம் இந் நன்கொடையை அளித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கொரியா, சியோல் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை இராணுவ தளபதியுடன் இணைந்து இந்த நன்கொடை ஏற்பாடு செய்யப்பட்டது.
முப்படையினரின் பயன்பாடுகளுக்காக வழங்கப்பட்ட 25 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடை பொருட்களில் 8,000 முக கவசங்கள் மற்றும் கொவிட்-19 நோயறிதலுக்கான 10,000 ரெபிட் எண்டிஜென் டெஸ்ட் பரிசோதனை பொருட்களும் உள்ளடங்கியுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நன்கொடையளிக்கும் நிறுவனங்களின் உள்ளூர் பங்காளர்கள் கலந்து கொண்டனர்.