அநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை
ஜனவரி 22, 2021- ஹோமாகம விமலஞான விகாரையில் தர்ம சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
பௌத்த போதனைகளை பரப்பும் உன்னத நோக்கில் ஹோமாகமவில் உள்ள விமலஞான விகாரையில் தர்ம சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இலங்கையின் மகாபோதி சங்க தலைவரும், ஜப்பான் மகா சங்க நாயக்க தேரருமான பாணகல உபதிஸ்ஸ தேரர் தலைமையில் நேற்று (ஜனவரி, 21) இடம்பெற்றது.
இலங்கை பௌத்த மறுமலர்ச்சிவாதியும், பிரபல எழுத்தாளருமான அநகாரிக தர்மபாலவின் மரணத்தைத் தொடர்ந்து, மகாபோதி சமூக நிலையம் புத்தர பிரானின் போதனைகளை பரப்பும் உன்னத பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
ஹோமாகம விகாரையின் பிரதம விகாராதிபதி மொனராகல பங்ஞாலங்கார தேரர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர், பௌத்தம், சமாதானம், பூரணத்துவம் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய போதனைகள், பக்தர்களுக்கு மட்டுமன்றி புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைபொருளுக்கு அடிமையானவர்களுக்கும் எத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புரவலர்களான இந்திர காந்தி மற்றும் பத்ம ஹர்ஷ பனாகொட ஆகியோர் 70 பேர்ச் பரப்பளவைக்கொண்ட காணியை நன்கொடையாக வழங்கி தர்ம மண்டபம் அமைக்கும் திட்டத்திற்கு உந்து சக்தியளித்தனர்.
அஸ்கிரிய பீடத்தின் இலங்கை ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் மகா விகாராதி ராஜகீய பண்டித வண. வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்ஞானந்த ஞானரத்தநாபிதான தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக தேரர் வண. திம்புல் கும்புரே ஸ்ரீ விமலதர்ம தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக தேரர் வண. வென்துருவே உபாலி தேரர், மல்வத்து பீடத்தின் லேககாதிகாரி வண. கலாநிதி பஹமுனே தர்மகீர்த்தி ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் லேககாதிகாரி வண. கலாநிதி. மெதகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்க தேரர்களது சமய கிரிகைகளின் பின்னர் குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வர்த்தக அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குணவர்தன, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் மகாபோதி சமூக நிலையத்தின் செயலாளர் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.