நாட்டில் 18,515 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு

ஜனவரி 24, 2021

இன்று ஜனவரி 24ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 724 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 57,586ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட  அனைவரும் இலங்கையரகள் ஆவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 197 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 110 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 106 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 311 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 18,515 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் (ஜனவரி 23) மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 644 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,260 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8,046 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 91 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 8,117 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்வடைந்துள்ளது.