விமானப் படையின் வருடாந்த கொல்ப் போட்டியில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

ஜனவரி 25, 2021

இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து நடத்திய வருடாந்த கோல்ஃப் போட்டி  விமாளப்படைத் தயபதி கிண்ணம் - 2021 திருகோணமலை சீன விரிகுடாவில் அண்மையில் நடைபெற்றது. இதில்  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொல்பிளை விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்ததுடன்  82கொல்ப் விளையாட்டு வீரர்கள் இதன் போத விளையாடி தமது திறமைகளை வெளிகாண்பித்தனர்.

சீனக்குடாவிலுள்ள ‘ஈகிள்ஸ் பே வியூ’ ரிசார்ட்டில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி சித்ரானி குணரத்ன, திருமதி சார்மினி பதிரனா மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதிகள் கலந்து கொண்டனர்