--> -->

கெபிதிகொல்லாவாவில் விமானப்படையினரால் அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

ஜனவரி 29, 2021

கெபிதிகொல்லாவா, கனுகஹவெவ கிராமத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையின் கீழ் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கனுகஹவெவ கிராமத்தில் 'கிராமத்துடன் பேசுதல்' திட்டத்தின் மற்றொரு அமர்வை நடத்தியதைத் தொடர்ந்து இந்த கிராமத்தில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை விமானப்படை கையிலெடுத்தது.

அபிவிருத்தி நடவடிக்கைகளில் , தேவையுடைய  குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்தல், கனுகஹவெவ பாடசாலை மற்றும் விகாரையில் மறுசீரமைப்பு வேலைகள் ஆகியவை அடங்கும்.

பிரதேச செயலகத்தின் முன்மொழிவு திட்டத்திற்கமைய தேவையுடைய குடும்பங்களுக்கு  அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டம்,  விமானப்படையின்  70 வது ஆண்டுவிழாவினை முன்னிட்டு மேலும் விமானப்படை தளபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய  இந்த கிராமத்தில் வசிக்கும் 314 குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.