போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கான சட்ட சீர்திருத்தங்கள் - பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 30, 2021
  • போதைக்கு அடிமையான அப்பாவி இளைஞர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

போதைப் பழக்கத்திற்கு ஆளான சிறு குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை புனவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கு விரைவில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 29) தெரிவித்தார்.

"சட்ட நடவடிக்கைகளுக்கு மாதிரிகளை அனுப்பும் போது அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்காக நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட கணிசமான போதைப் பொருள்களும் நீதித்துறையின் தீர்ப்பைத் தொடர்ந்து உடனடியாக அழிக்கப்படும், " என அவர் மேலும் தெரிவித்தார்.

“குற்றச் செயல்களில் ஈடுபட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்தமையானது, நமக்குள் இருக்கும் யார் எதிரியை வெளிப்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள நவதிகந்தய (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம்), அங்குரார்பன நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தனகல்ல ரஜ மஹா விஹாரரையின் பிரதம விஹாரதிபதி கலாநிதி பன்னில ஆனந்த நாயக்க தேரரின் நிதியுதவியில் கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஆளனியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் தேசிய கருத்திட்டத்திற்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேற்பார்வையின் கீழ் அதே இடத்தில் மற்றுமொரு புதிய கட்டிட தொகுதியை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் புனர்வாழ்வளித்து போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி அளிக்கப்பட உள்ளது.

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ. லசந்த அலகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒரு போதைப் பொருளற்ற நாட்டாக முன்னோக்கி செல்வது தொடர்பாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், அது ஒரு இலேசான பாதையாக அமையப்போவதில்லை தெரிவித்ததுடன் போதைப்பொருளுக்கு அடிமையான அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க இதுபோன்ற எட்டு கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனது காலத்தில் இந்த கட்டிட தொகுதிகளின் நிர்மாணப் பணிகளுக்கு முப்படைகளிலிருந்து படைவீரர்கள் ஆளனியிராக செயற்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

அடுத்தடுத்து வரும் கட்டங்களைத் தொடங்குவதற்கு தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தபாதுகாப்புச் செயலாளர் "இந்த வசதிகள் , ஒரு நேரத்தில் 60 கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்." என தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், 2,000 கைதிகளை பராமரிக்க தேவையான வசதிகளுடன் கூடிய 20 கட்டிடங்களை வீரவில பகுதியில் நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக இல்லாது ஒழிப்பதாக வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர்.

"மோசமான பாதாள உலக செயற்பாட்டாளர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக ஒரு சில அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணியதால் 'அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைகளை நாம் உருவாக்கியுள்ளோம் என தெரிவித்தார்.

போதைப்பொருள் வலையமைப்புடன் சம்பந்தப்பட்ட தலைவர்களை மாத்திரம் கைது செய்யாமல் அவர்களுடன் தொடர்புபட்ட பிராந்தியபோதைப்பொருள் விற்பனையாளர்கள் கைதுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"புனர்வாழ்வளிக்கும் மையங்களில் உள்ள வசதிகள் போதுமானதாக இல்லை மற்றும் தேவைக்கேற்ப 1000 கைதிகளைப் பற்றி புனர்வாழ்வளிக்கும் தேவை இல்லை," என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் இதன்போது தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இணையத்தளம் மீள அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், வண. கலாநிதி பன்னில ஆனந்த நாயக்க தேரருக்கும் ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த பணிகளுக்கான நன்கொடைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மகத்தான பணிக்கான அடிக்கல் கடந்த வருடம் ஜூன் மாதம் 26ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரினால் நட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மஹா சங்கத்தினர், மேலதிக செயலாளர் (தேசிய பாதுகாப்பு) சமந்தி வீரசிங்க, தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு), தேசிய மாணவப் படை சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பி.டபிள்யூ.பி ஜெயசுந்தர, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் லக்நாத் வெலகெதர, சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய, கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க (ஓய்வு), ஐ.நா.வின் போதை ஒழிப்பு பிரிவு செயற்பாடுகளுக்கான இலங்கையின் பிரதிநிதிகள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்களும் கலந்து கொண்டனர்.