இராணுவத்தினரால் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது
பெப்ரவரி 01, 2021யாழ்ப்பாணம், வசவிளான் பிரதேசத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தை இராணுவத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கும் நிலையமாக அண்மையில் மாற்றியமைத்துள்ளனர்.
குறித்த கட்டிடத்தில் 500-1000 படுக்கைகள் கொண்ட புதிய வசதிகளை நிறுவும் பணிகளை, யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியின் வழிகாட்டலின் பிரகாரம் 521வது பிரிகேட் படைவீர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தினரால் நிறுவப்பட்ட இந்த புதிய நிலையத்தை கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் (ஜனவரி, 31) பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது விமானப்படையின் பிரதம அதிகாரி, இராணுவத்தின் பிரதம அதிகாரி, யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.