இராணுவத்தின் 337 அதிகாரிகள், 8,226 வீரர்கள் தரமுயர்த்தப்பட்டனர்

பெப்ரவரி 04, 2021

இலங்கையின் 73 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 8563 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளைச் சேர்ந்த 337 அதிகாரிகளும் 8,226 வீரர்களும் அடங்குவதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சினதும் பரிந்துரைக்கமைய ஆயுதப் படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு பெப்ரவரி 04ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவிக்கிறது.

 இதற்கமைய, 14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும்,  23 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், லெப்டினன்ட் கேர்ணல்கள் 35 பேர்  கேர்ணல் தரத்திற்கும், 34 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கும், 206 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும், 22 லெப்டினன்ட்கள் கெப்டன் தரத்திற்கும் 3 இரண்டாம் லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாகவே தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

 மேலும், வாரண்ட் அதிகாரிகள் – ii தரத்தைச் சேர்ந்த 212 பேர் வாரண்ட் அதிகாரிகள் – i தரத்திற்கும், பதவிநிலை சார்ஜென்ட்கள் 795 பேர் வாரண்ட் அதிகாரிகள் - ii தரத்திற்கும், சார்ஜென்ட்கள் 1351 பேர் பதவிநிலை சார்ஜென்ட தரத்திற்கும், 1422  கோப்ரல்கள் சார்ஜென்ட் தரத்திற்கும், லான்ஸ் கோப்ரல்கள் 2070 பேர் கோப்ரல் தரத்திற்கும;,  2415 ப்ரைவட்கள்  லான்ஸ் கோப்ரல்கள் தரத்திற்குமே தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.