'ஏரோ-இந்தியா 2021', இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் இணைந்த கட்டமைப்பின் முன்னோக்கி நகர்வு
பெப்ரவரி 05, 2021இலங்கை தேசமானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதாகவும் அது பல வர்த்தக ரீதியிலான கடல் மார்க்கங்களின் முக்கிய முனைகளை தொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதனால் அதன் வகிபாகம் அனைத்து விவகாரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
எனவே, இந்த கடல் மார்க்கங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதனை பாதுகாக்கும் காத்திரமான வகிபாகத்தினை இலங்கை தன்வசம் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தனது தரைப்பகுதியை விட 27 மடங்கு அளவிலான கடல் பிராந்தியத்தில் 200 கடல் மைல்கள் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ள இலங்கை, அப்பிராந்தியத்தில் தேடல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது எனவும் "தற்போதைய கடல்சார் சூழல், பொறுப்பான பகுதியை பொலிப்படுத்தும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்புப்படைத் திணைக்களத்தால் பெரும் பங்களிப்பு வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இணைய வழி மூலமாக இந்திய கடலோர பாதுகாப்புப் படையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம் பெற்ற 'ஏரோ இந்தியா 2021' இந்திய கடலோரப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டபோதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
'இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் சுத்தமான கடலுக்கான கூட்டு அணுகுமுறை' எனும் தொணிப்பொருளில் கடலோர பாதுகாப்பு படையின் இணைய வழி மூலமான கருத்தரங்கு இடம் பெற்றது.
'ஏரோ இந்தியா 2021' தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள இந்தியாவின் பார்வையின் ஒரு ஆழமான வெளிப்பாடாக இருப்பதாககவும் அத்துடன் இது இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் காணப்படும் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்த இணைய வழி கருத்தரங்கு தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கடல் சூழல் மாசடைதல், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், எண்ணெய் மற்றும் இரசாயண கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், தகவல் அறிவிக்கப்படாத சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், கடல்சார் தொல்பொருள் தலங்கள், கடல் வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட வழக்கமான சவால்களை எதிர்கொள்வதற்கு அப்பால் கடலோர பாதுகாப்பு படை பதிலளிக்க மற்றும் கண்காணிக்க வேண்டிய மேலும் பல விடயங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் ஏரோ-இந்தியா 2021, ஏயார் கண்காட்சி நிகழ்வினை பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்திய அரசு இணைந்து இம்மாதம் 3ம் 5ம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணைய வழி மூலமான கண்காட்சி அமர்வின் போது கலை உபகரணங்களை ஆய்வு செய்ய ஒரு தளமாக இருந்தது.
இரு நாடுகளின் கடலோர பாதுகாப்பு படையினருக்கு இடையிலான கூட்டு பயிற்சியின் போது, தேடுதல் மற்றும் மீட்பு செயல்பாடுகளுக்கு அவசியமான தகவல்களை பரிமாறுதல், குறுக்கீடு கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், மிக முக்கியமாக இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படை நிறுவனங்களுக்குள்ளேயே தரவு மற்றும் புலனாய்வு பகிர்வுக்கான திறனை அதிகரித்தல் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவார்ந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக இந்திய கடலோரப் பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியை தெரிவித்ததுடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பக்லேவுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையிலும் இந்திய உயர்ஸ்தானிகர் பக்லேவினால் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படை திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஏக்கநாயக்க ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட முப்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள், அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.