--> -->

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,460 ஆக அதிகரிப்பு

பெப்ரவரி 06, 2021

இன்று பெப்ரவரி 06ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 735  பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 67,849 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த ஆறு பேரும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 158  பேரும், பதுள்ளை மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 94 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 372 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை to 63,854 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 60,047 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


நாட்டில் 12,024 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 894 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61,460 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  6,046 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 90 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 7,941 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர்  உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343  ஆக உயர்வடைந்துள்ளது.