--> -->

இந்தோனேஷிய கடற்படை கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது

பெப்ரவரி 06, 2021

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான "கிரி புங் டோமோ" என்ற கடற்படை கப்பல் இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்த குறித்த கப்பலுக்கு கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

இந்தோனேஷிய கடற்படையின் 1வது கடற்படை கட்டளையின் எஸ்கார்ட் ஸ்கொட்ரன் பிரிவைச் சேர்ந்த 95 மீ நீளமான இந்த மல்டி ரோல் லைட் பிரிகேட் கப்பலில் 103 கடற்படை வீரர்கள் பயணிக்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு போர்க் கப்பல்களின் வருகைகள் நாடுகளுக்கு இடையிலான பிணைப்புக்களை குறிப்பதாகவும், அது கடற்படை உறவுகளை வலுப்படுத்த உதவுகிறது எனவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட்–19 பரவலை தடுக்க சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதலுக்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் வரையறை செய்யப்படிருந்தமை சிறப்பம்சமாகும்.

இந்த கப்பல் இன்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil