பொத்தெனிகந்த பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்புப்பணி இராணுவத்தினரால் ஆரம்பிப்பு
பெப்ரவரி 08, 2021இலங்கை இராணுவம், தெரனியகல, மாலிபொட பொத்தெனிகந்த மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தை புதுப்பிக்கும் பணியை நேற்று (பெப்ரவாரி, 7) ஆரம்பித்தது.
பெப்பிரவரி 6 ஆம் திகதி தெரனியகலவில் நடைபெற்ற ஜனாதிபதியின் 'கிராம மக்களுடனான சந்திப்பு' நிகழ்ச்சித் திட்டத்தின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை செவிமடுத்த ஜனாதிபதி, இலங்கை இராணுவத்திடம் இந்த புனரமைப்புப்பணி ஒப்படைக்கப்படைத்தார்.
இதற்கமைய, 1வது கள பொறியியலாளர் படைவீரர்களின் மனித வலு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையினர் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்தனர்.