காணாமல்போன நபரின் உடல் இராணுவத்தினரால் மீட்பு
பெப்ரவரி 10, 2021பிபில, சிறிய உலக முடிவு பகுதியில் காணாமல்போன தினுர விஜேசுந்தரவின் உடல் உயிரிழந்த நிலையில் இராணுவத்தின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.
மத்திய மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் விஷேட படையணியின் கட்டளைத் தளபதியின் பணிப்புரைக்கமைய 112 பிரிகேட் விஷேட படையினரால் தேடல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பகுதியில் மோசமான வானிலை நிலவிய போதிலும் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையின் போது அவசர ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
களுத்துறை, மக்கோனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான இவர் கடந்த சனிக்கிழமை 11 பேர்களுடன் சுற்றுலா சென்றிருந்தவேளை மோசமான வானிலை காரணாமாக காணமல் போயிருந்தார்.
சிறிய உலக முடிவு என அழைக்கப்படும் பகுதியிலிருந்து சுமார் 1200 அடி பள்ளத்தில் இருந்து அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.