--> -->

1 லட்சம் பெறுமதியான சுகாதார பொதிகளை இராணுவம் பெற்றுக்கொண்டது

பெப்ரவரி 11, 2021

சமூக பொறுப்பு மற்றும் இன நல்லிணக்க செயர்பாடுளுக்கான தனது சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமான 'முஸ்லிம் எய்ட் – ஸ்ரீ லங்கா' நிறுவனம் அரசாங்கத்தின் னிமைப்படுத்தல் மையங்களில் பயன்படுத்துவதற்காக 500 சுகாதார பொதிகளை நன்கொடையாக வழங்கியது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 1 மில்லியன் ரூபா பெறுமதியான நன்கொடையை கடந்த 09ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நாட்டின் இயக்குநர் ஏ.சீ. பைசர் கான், கொள்முதல் மற்றும் தளவாட அதிகாரி எம்.ஐ.இசாஹுக், திட்டமிடல் பிரிவு முகாமையாளர் எம்.எச்.எம்.எம். அமீர் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.