'கொழும்பு கடற்படை பயிற்சி- 2021' வெற்றிகரமாக நிறைவு
பெப்ரவரி 11, 2021இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கொழும்பு கடற்படை பயிற்சி- 2021' நேற்றையதினம் (பெப்ரவரி, 10 ) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
'கொழும்பு கடற்படை பயிற்சி- 2021'யின் இறுதி நாள் நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டு அதனை மீளாய்வு செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை பயிற்சியில் கடற்படையின் 04 ஆழ்கடல் ரோந்து கப்பல்களும், 02 அதிவேக தாக்குதல் கப்பல்களும், 02 கரையோர ரோந்து கப்பல்களும், 01 வேக விரைவு தாக்குதல் படகும், எட்டு (08) அதிவேக தாக்குதல் படகுகளும் 04 புலோடிள்ளா ரக தாக்குதல் படகுகளும் பங்குபற்றின.
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் 03 கப்பல்களும் இலங்கை விமானப்படையின் எம்ஐ 17, பெல் 412 மற்றும் பெல் 212 ஹெலிகொப்படர்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பி-200 ரக விமானமும் இப்பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுப்பயிற்சியானது, கடற்படை பிரிவுகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தல் மற்றும் நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
கடல்சார் சூழலில் கடற்படை மற்றும் விமானப்படையின் யுத்த தளவாடங்களை என்பன ஒருங்கிசைவாக பயன்படுத்தும் முறைமைகள் இந்த இணைந்த கூட்டுப்பயிற்சியில் கையாளப்பட்டது.
மேலும், கடற்படை தளபதி ஒருவர் கொழும்பு கடற்படை ப்பயிற்சியில் கலந்து கொண்டது கடற்படை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்த அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.