கொவிட் 19 பரவல் வழக்கமான கல்வி நடவடிக்கைக்கு சவால் – பாதுகாப்பு செயலாளர்
பெப்ரவரி 12, 2021- கல்வித் துறை இதற்கு முன் கண்டிராத மாற்றங்களை சந்தித்துள்ளது
கொவிட் 19 பரவலானது, எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் ," வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை” கல்வி நடவடிக்கைகளை வழங்கும் கற்கை நிலையங்களினால் மாணவர்களுக்கான கற்கையினை தகவல் தொழிநுட்பத்தினை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய சவால்களை வெற்றிகொள்ள முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)தெரிவித்தார்.
தமது கல்வி நடவடிக்கைகளை இணையவழி மூலம் முன்னெடுக்க இயலாமையை எதிர்நோக்கியுள்ள சமூகங்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாக குறிப்பிட்ட ஜெனரல் குணரத்ன, வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையம் வழங்கும் மகத்தான சேவையைப் பாராட்டினார்.
வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ துறையில் சவால்களை எதிர்கொள்ளும் போது கவலைகளை எழுப்பிய ஜெனரல் குணரத்ன, வழங்கல் சங்கிலிகளில் இடையூறு விளைவிக்கும் நிகழ்வுகளுக்கு இடர் முகாமைத்துவம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நிதி நெருக்கடிகள் போன்ற இடையூறுகளை தணிப்பதற்கு கண்காணிப்பு மற்றும் பின்னடைவுக்கான ஒரு முறைமை தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
"உலகமயமாக்கல் உலகளவில் விநியோக நிறுவனங்களை சீர்குலைக்கும் நிகழ்வு ஏற்படும் போது விரைவாக செயல்பட கட்டாயப்படுத்துகிறது" எனவும் "அபாயங்களைத் தடுப்பது மற்றும் குறைப்பதற்கு ஒரு முறையான அணுகுமுறை இன்னும் முக்கியமானது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பாதுகாப்புச் செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவர் "சீர்குலைக்கும் நிகழ்வுகள், தடைகளை மட்டுமல்ல, போட்டியாளர்களிடமிருந்து வணிகத்தை வெல்லும் வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்பதை வல்லுநர்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று மாலை நடைபெற்ற வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தமது கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 2016 - 2019 ஆம் ஆண்டுக்கான பட்டதாரிகள் இதன்போது பிரதம விருந்தினரிடமிருந்து தமது பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் தமது கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 47 மாணவர்கள் விழாவில் சான்றிதல்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, சிறந்த மாணவனுக்காக வழங்கப்படும் கெப்டன் வி.டி.டி அமரதுங்கா நினைவு விருது காஞ்சனா ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டது.
கொவிட் 19 தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமது ஆய்வுகள் முடியும் வரை தொடர்ந்து செயற்பட்டதை பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாபெரும் அனுபவமாக பெற்று செயற்பட்டதை தாம் பாராட்டுவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
"உலகம் முழுவதும் உள்ள கல்வித் துறை இதுவரை பார்த்திராத மாற்றங்களை கண்டுள்ளது" என்று தற்போதைய உலக தொற்று நோய் நிலைமையை மேற்கோள் காட்டி, "இன்று நாம் ஒரு புதிய சகாப்தத்தில் இறங்குகிறோம், நாம் அனைவரும் ஒரு புதிய மாற்றத்தை அனுபவித்து வருகிறோம்" என்று கூறினார்.
மேலும், பாதுகாப்பு செயலாளர் இந்த விழாவின் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் தலைவர் ஐஜி.பெரேரா வரவேற்புரை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் கவுன்சில் உறுப்பினர்கள், வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வி நிலையத்தின் பாடநெறி பணிப்பாளர்கள் மற்றும் கல்விஊழியர்கள், அதிதிகள், 2016 -2019 பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.