வெளிநாட்டில் படை பணிகளை நோக்காகக் கொண்டு இராணுவத்தினரால் களமுனை பயிற்சிகள் முன்னெடுப்பு
பெப்ரவரி 13, 2021ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ள இராணுவ பணிக்குழுவுக்கு முன்னாயத்த பயிற்சி அளிக்கும் வகையில் 'ஹர்மட்டன் - 3' என்ற ஆயத்த களமுனை பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
மாலி மற்றும் கோவா, நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு தயார் செய்யும் வகையில் இந்த முன்னாயத்த பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 457.2 கி.மீ பரப்பளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள குறித்த முன்னாயத்த பயிற்சி திட்டம், நேற்று யாழ், மைலிட்டி ஆரம்பமாகிய அதே வேளை, எதிர்வரும் 16ம் திகதி மின்னேரியாவில் உள்ள காலாட்படை பயிற்சி மையத்தில் நிறைவுபெறவுள்ளது.
5 கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள குறித்த முன்னாயத்த பயிற்சி திட்டத்தில் இராணுவத்தின்
12 ரெஜிமென்ட்களைச் சேர்ந்த மொத்தம் 20 அதிகாரிகள் மற்றும் 223 படை வீரர்களுடன், கவச வாகனங்கள், யூனிபபெல்ஸ் மற்றும் நிர்வாக வாகனங்கள் உட்பட 47 வாகனங்கள் பங்கேற்கின்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பயிற்சியின் போது, மாலி மற்றும் கோவாவில் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கான திறனை பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் வளர்த்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த ஆண்டு ஒரு வருட கால பதவிக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பவுள்ள இலங்கை இராணுவத்தின்
இரண்டாவது இராணுவ பணிக்குழுவின் மாற்றாக தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் கடமை புரியவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.