--> -->

புத்தளவில் இராணுவத்தினர் 900 மரக்கன்றுகள் நடுகை

பெப்ரவரி 15, 2021


புத்தள ரஜ மகா விகாரை வளாகத்தில் இலுப்பை, நாகை மற்றும் மருது ஆகிய அறிய 900 மரக்கன்றுகளை இராணுவம் அண்மையில் நடுகை செய்தது.

வன வளத்தினை அதிகரித்தல் எனும் தேசிய திட்டத்திற்கு உந்து சக்தியளிக்கும் வகையில் இராணுவத்தின் 'துரு மிதுரு நவ ரடக்' திட்டத்தின் கீழ் 121 பிரிகேட்டின் கட்டளைத்தளபதியின் பணிப்புரைக்கமைய மரம் நடுகை செய்யும் பணி நடைபெற்றது.

20வது இலங்கை சிங்க ரெஜிமென்டு மற்றும் 18வது கெமுனு வாட்ச் படை பிரிவுகளைச் சேர்ந்த படை வீரர்கள் இந்த மர நடுகை திட்டத்தில் ஈட்பட்டமை குறிப்பிடத்தக்கது.