படையினரால் வைத்தியசாலைகளில் அவசர உதவி
பெப்ரவரி 25, 2021தொழிற்சங்கப் பிரச்சினைகள் முன்வைத்து சுகாதார் சிற்றூழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து கொழும்பில் அமைந்துள்ள 14வது படைப்பிரிவு தலைமையகத்தின் 185 படை வீரர்களைக் கொண்ட குழுவினர், கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தமது உதவிகளை வழங்க முன்வந்தனர்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் குறித்த படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை, களுத்துறை மாவட்ட வைத்தியசாலை, அவிஸ்ஸாவெல்ல மாவட்ட வைத்தியசாலை, ஹோமாகம மாவட்ட வைத்தியசாலை, புத்தளம் ஆதார வைத்தியசாலை, மாரவில மாவட்ட வைத்தியசாலை, சிலாபம் ஆதார வைத்தியசாலை, குருநாகல் ஆதார வைத்தியசாலை, பொல்பிதிகம மாவட்ட வைத்தியசாலை, கல்கமுவ மாவட்ட வைத்தியசாலை, தம்பதெனிய மாவட்ட வைத்தியசாலை, நிக்கவரெட்டிய மாவட்ட வைத்தியசாலை, தலங்கம மாவட்ட வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14வது பிரிவு படை வீரர்கள் அவசர சேவை பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.