இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
மார்ச் 05, 2021இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் ரிடா குலியானா மன்னெல்லா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஒய்வு) இன்று (மார்ச், 05) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இத்தாலிய தூதுவர் அதிமேதகு மன்னெல்லா, புதுடெல்லியில் வர்த்தக முதன்மை செயலாளராகவும், ரோம் நகரினை தளமாகக் கொண்டுள்ள உலக ஸ்தாபனங்களுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் இத்தாலிய தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்