ஊடக அறிக்கை
ஏப்ரல் 21, 2019கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இன்று இடம்பெற்ற வெடிவிபத்துகள் கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதினொன்றாக பதிவாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று இந்திய பிரஜைகளும், ஒரு போர்த்துக்கல் பிரஜையும், இரண்டு துருக்கி பிரஜைகளும், மூன்று பிரிட்டன் பிரஜைகளும், இரண்டு அமெரிக்க பிரஜைகளும் அடங்குகின்றனர்.
இதற்கு மேலதிமாக , ஒன்பது வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ள போதிலும், கொழும்பிலுள்ள சட்ட வைத்திய அதிகாரி பிரேத அறையில் வெளிநாட்டவர்கள் என நம்பத்தகுந்த இருபது ஐந்து அடையாளம் காணப்படாத சடலங்கள் உள்ளன.
மேலும், இன்று காலை 6 மணியளவில், தாக்குதலில் காயமடைந்த 19 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் பணிப்பாளர்கள், குறித்த வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ள அல்லது உயிரிழந்துள்ள நிலையில் அனுமதிக்கப்பாடவில்லை வெளியுறவு அமைச்சிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் சுற்றுலா, வனவிலங்கு மற்றும் கிரிஸ்தவ சமய விவகார செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரை இன்று மதியம் விஜயம் செய்து பார்வையிட்டதுடன் குண்டுதக்கதளுக்கு இலக்காகி மரணமடைந்த வெளிநாட்டவர்கள் தொடர்பாக அந்தந்த வெளிநாட்டு தூதரகங்களின் மூலம் அந்தந்த நாடுகளின் மிஷன் தலைவர்களுக்க உயிரிழப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ஏனையோரை அடையாளம் காணுவதற்காக வெளிவிவகார அமைச்சு சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. மேலும் சிகிச்சை பெறும் வெளிநாட்டு நாட்டு பிரஜைகளின் நலன்புரி விடயங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் வெளிநாட்டிலுள்ள உறவுகளுக்கு தகவல்களை வழங்குவதற்காக 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் தகவல் வழங்கும் திட்டம் ஒன்றும் செயற்படுத்தப்படுகின்றது.
தகவல்களுக்கு அணுகவேண்டிய தொலைபேசி இலக்கம் - +94 112323015.
வெளிவிவகார அமைச்சு
21 ஏப்ரல் 2019