எலுதுமடுவலில் படையினர் மற்றும் கரிட்டாஸ் - மனித மேம்பாட்டு மையத்தினால் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு
மார்ச் 12, 2021யாழ் - பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் ' யாழ் - கரிட்டாஸ் - மனித மேம்பாட்டு மையம்' ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் எலுதுமடுவல் பிரதேசத்தில்மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தன.
இதற்கமைய, “வடக்குக்கான கரிட்டாஸ் குடும்பத்தின் நட்பு பயணம்” என்ற கருப்பொருளின் கீழ் மா, தோடை, கொய்யா, பலா, முந்திரி, மாதுளை போன்ற 2000 மரக்கன்றுகள் நடுகை செய்யப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் யாழ் மறை மாவட்ட ஆயர் வண. கலாநிதி ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம், மத தலைவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், கரிட்டாஸ் - மனித மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.