கந்தளாய் அல்லை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு
மார்ச் 13, 2021கந்தளாய் அல்லை பகுதி ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 4வது விஷேட படையணி வீரர்களினால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
சம்பவ இடத்திற்கு இராணுவம் வருகை தந்தபோது சந்தேக நபர்கள் தங்கள் டிராக்டர்கள் மற்றும் கருவிகள் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.