கடற் படையினரால் கரையோரங்களில் கண்டல் தாவரங்கள் நடுகை
மார்ச் 15, 2021கடல் தாவர சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இலங்கை கடற்படையினரால் நேற்று பொன்னாலை கடற்கரை பிரதேசத்தில்கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கண்டல் தாவரங்கள், கடற்கரை வலயங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் தண்மை கொண்டதினால் அவை பிராந்திய சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கக் கூடிய தாக அமைகின்றன.
இந்த திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கமைய வட பிராந்திய கடற்படை கட்டளையக கட்டளை தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.