21 பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் 15 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்களை வெற்றிகரமாக மீட்பு
மார்ச் 18, 2021மாலியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ. நா. பலபரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் இலங்கை படைக்குழுவினர் மார்ச் 15ம் திகதி வரை மேற்கொண்டுள்ள 21 பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் 15 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
மாலியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ. நா. பலபரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் இலங்கை படைக்குழுவினர் தமது சக வீராகளுக்கோ, தளவாடங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதுவித சேதமும் ஏற்படாமல் மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டமையினால் இப்படைக்குழுவுக்கு கட்டளையிடும் கட்டளை அதிகாரி இவர்களின் இந்த நடவடிக்கைகளை பெரிதும் பாராட்டியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், மீட்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்கள், மாப்டி, கிடால் மற்றும் டாம்பௌக்டோ பகுதிகளில் உள்ள பழங்குடியின போராளிகளால், பிரமுகர்கள் மற்றும் மாகாண நிர்வாகிகளை குறிவைத்து புதைக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துணிகர நடவடிக்கைகளை மாலியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ. நா. பலபரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் படைகளின் கட்டளைத்தளபதி உள்ளிட்ட சிரேஷ்ட உயர் இராணுவ அதிகாரிகள் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.