'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு 2.65 மில்லியன் ரூபா நன்கொடை

மார்ச் 19, 2021

'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு நேற்று (மார்ச் 18) வைத்தியர் பிரியங்கி அமரபந்துவினால் 2.65 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர், பாதுகாப்பு செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) இதற்கான காசோலையை வழங்கி வைத்தார்.

மஹரகமவில் உள்ள தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணரான வைத்தியர் பிரியங்கி அமரபந்துவினால் வழங்கப்பட்ட இந்த நன்கொடை யானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நலன்விரும்பிகளின் இணைந்த முயற்சியாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.