சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக புனித பொருட்கள் அன்பளிப்பு

மார்ச் 19, 2021


சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக ஒரு தொகை பெறுமதிவாய்ந்த புனிதப் பொருட்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) இன்று (மார்ச், 19) கையளிக்கப்பட்டது.

சந்தஹிரு சேய தூபியில் புனித பொருட்களை வைப்பதற்காக பொதுமக்கள் தமது பங்களிப்பினை இம்மாதம் 20ம் திகதி முதல் 27ம் திகதி வரை வழங்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கமைய, நாஉயன ஆரண்ய சேனாசன பீட வண. அகுல்கமுவே ஆரியனந்த தேரரினால் தங்க முலாம் பூசப்பட்ட புத்த சிலைகள், பௌத்த போதனைகள் அடங்கிய பேழை, புத்தரின் கால் பாத சுவடு, அலங்கரிக்கப்பட்ட தூபிகள் மற்றும் கலை பொருட்கள் என்பன இவ்வாறு பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

வண. ஆரியானந்த தோர் தலைமையிலான நலன்விரும்பிகள் சிலர் இந்த புனித பொருட்களை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற வைபவத்தின் போது செயலாளரிடம் ஒப்பபடைத்தனர்.

குறித்த புனிதப் பொருட்கள் எதிர்வரும் 28ம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ள புனித பொருட்களை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபத்தின் போது தூபியின் நாற்சதுர பகுதியில் வைக்கப்படவுள்ளன.

மாபெரும் தூபியின் நாற்சதுர பகுதியில் புனிதப் பொருட்கள் வைக்கப்பட்ட பின்னர் அதன் ஏனைய கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தூபியின் நாற்சதுர பகுதியில் வைக்கப்படவுள்ள புனித பொருட்களை சேகரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.