அபி வெனுவென் அபி திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு வீடுகள் கையளிப்பு

மார்ச் 20, 2021

       •   படை வீரர்களின் வீடமைப்பு தேவைக்கான தீர்வுகள்

தாய்நாட்டுக்காக தம்மை அர்பணித்த படைவீரர்களின் சொந்த வீடு எனும் கனவை நானவாக்கும் அபி வெனுவென் அபி திட்டத்தின் மூலம் பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு படைவீரர்களின் வீடுகளுக்கு நிதி மற்றும் ஆளணி உதவிகளை வழங்கி அவர்களின் வீடுகளை முழுமை அடையச் செய்து அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (மார்ச், 20) மாத்தறை, வெவஹமன்துவயில் இடம்பெற்றது.

அபி வெனுவென் அபி திட்டத்தின் கீழ் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அவர்களினால் பகுதி அளவில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு அல்லது முழுமையாக வீடுகளை அமைப்பதற்கான நிதி மற்றும் ஆளனி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, 9வது கெமுனு வோச் படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வை கே டி என் மஹீராஜ், பகுதியளவில் கட்டி முடிக்கப்பட்ட தனது வீட்டின் முழுமைப் படுத்துவதற்கான நிதி உதவியினை அபி வெனுவென் அபி திட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்டார்.

அவர் மனிதாபிமான நடவடிக்கையின் போது அங்கவீனமுற்று மருத்துவ வகை ஓய்வூதிய பிரிந்துரைக்கு அமைய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

புதுமனை குடிபுகுதல் நிகழ்வு மகா சங்கத்தினரின் மத அனுஷ்டான நிகழ்வினை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பாதுகாப்புச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத் (ஓய்வு) ஆகியோரின் தலைமையில் இன்று இடம்பெற்றது

மற்றுமொரு பயனாளியான 10வது கெமுனு வோச் படைப்பிரிவின் வர்ண சார்ஜன்ட் எல் விதானாரார்ச்சி ஊர்காவற்துறை பிரதேசத்தில் 1997ஆம் ஆண்டு கொடூர பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான போர்வீரர் ஆகும்.

பகுதி அளவில் கட்டிமுடிக்கப்பட்டிருந்த இவரின் வீடு அபி வெனுவென் அபி திட்டத்தின் மூலம் முழுமைப்படுத்த நிதி உதவி அளிக்கப்பட்டது

பயனாளிகள் இருவருக்கும் பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்கள் இந்த நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத், இராணுவத்தின் பதவிநிலை பிரதாணி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் பிரதி தலைவியும் கெமுனு வோச் படைப்பிரிவு சேவா வனிதா பிரிவின் தலைவியுமான ஷியாமலா பண்டார, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.