உயிர் காக்கும் மனிதாபிமான திட்டத்திற்கமைய இராணுவம் இரத்ததானம்
மார்ச் 21, 2021கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலன்கருதி கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையில் இலங்கை இராணுவத்தினரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட இரத்த வங்கி விடுத்த வேண்டுகோளுக்கினங்க, கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் இரத்ததானம் அளித்தனர்.
இந்த இரத்ததான நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் தமது பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.