புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமனம்
மார்ச் 22, 2021இம்மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் தனது நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகே தென்னவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.