71 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்
மார்ச் 23, 2021யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் நேற்றையதினம் (மார்ச் 22) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை டிப்பர் லொரி மூலம் கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படை, சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதே போன்ற நடவடிக்கையின் போது, வடபகுதி கடற்படை கட்டளையயாகத்தினால், வெற்றிலைக்கேணியில் உள்ள அலியாவெலை பகுதியில் வீதித்தடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிப்பர் லொரி சோதனைக்குற்படுத்தப்பட்டது. இதன்போது இந்த வாகனத்தை பயன்படுத்தி சந்தேக நபர்கள் 239 கிலோ கிராம் மற்றும் 850 கிராம் கேரளா கஞ்சாவை பொலித்தீன் 100 பொதிகளில் பொதிசெய்து 07 சாக்குகளில் இட்டு அடைத்து வைத்திருந்தனர். குறித்த நடவடிக்கையின்போது கேரள கஞ்சா, அதனை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொரி கைப்பற்றப்பட்டதுடன் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தற்போதையசந்தைப் பெறுமதி சுமார் 71.9 மில்லியன் ரூபா வாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கொவிட் -19 ஐ த் தடுப்பதற்காக பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதலலுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட வர்கள் 31 வயது முதல் 34 வயதுடைய வெற்றிலைக்கேணியில் உள்ள முள்ளியான் மற்றும் அலியாவளை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பலேய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:- www.navy.lk