கடற்படை சேவா வனிதா பிரிவினால் மரம் நடுகை திட்டம்
மார்ச் 24, 2021சர்வதேச வன தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவின் நாடு முழுவதும் மரம் நடுகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மரம் நடுகை செய்யும் திட்டத்தின் பிரதான வைபவம் வெளிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் கெமுனு படைத்தளத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இம்மாதம் 21ம் திகதி இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான மரக்கன்றுகள் 'துரு சன்சதய' சுற்றாடல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் வரையறுக்கப்பட்ட எல்பீ பினான்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரனையுடனும் இடம்பெற்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு கடற்படை தளபதி, கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, கடற்படை சேவா வனிதா பிரிவின் உப தலைவி, மேற்குக் கடற்படைப் பிராந்திய கட்டளை தளபதி,சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.