சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று
மார்ச் 28, 2021இலங்கை வரலாற்று ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயமாக, சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (மார்ச் 28) புனித நகரமான அனுராதபுரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
வண. மகா சங்கத்தினர் மற்றும் நாட்டின் பல பாகங்களில் உள்ள பக்தர்கள் ஆகியோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட விலையுயர்ந்த கலைப்பொருட்கள், புனித சின்னங்கள் மற்றும் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பெறுதிவாய்ந்த கல் என்பன இந்த நாற்சதுரத்தில் வைகப்பட்டன.
இந்த திட்டத்தின் பின்னணியில் உந்துசக்தியாக செயற்படும், பாதுகாப்பு செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள் தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) புனித நினைவுச்சின்னங்கள் அடங்கிய கலசத்தை தூபியின் நாற்சதுரத்தில் வைத்து மகா சங்கத்தினரிடம் கையளித்தார்.
பெறுமதிவாய்ந்த கலைப்பொருட்கள், புனித சின்னங்கள் மற்றும் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பெறுதிவாய்ந்த கல் என்பன வண. மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் வைப்புச் செய்யப்பட்டது.
பிரமாண்டமான முறையில் நிர்மானிக்கப்பட்டுவரும் இந்த தூபியினுள் புனித தாதுக்கள் மகா சங்கத்தினரின் அனுஷ்டானங்களின் பின் வைப்புச் செய்யப்பட்டது.
திரு. ஆர்தர் சேனநாயக்கவினால் தூபியின் முகட்டில் வைப்பதற்காக வழங்கப்பட்ட 3 அடி உயரமான சூடாமாணிக்கம் என்றழைக்கப்படும் "இரத்தின கல்", தனவந்தர்கள் மற்றும் பக்தர்களினால் அளிக்கப்பட்ட விலையுயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட கற்கள் மற்றும் தங்கம் ஆகியவை எட்டு புனித ஸ்தலங்களின் பொறுப்பாளரான
சிரினிவாச தேரரிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு தூபியின் முகட்டில் வைப்பதற்காக வழங்கப்பட்ட 3 அடி உயரம் கொண்ட இரத்தின கல் எட்டு புனித ஸ்தலங்களின் பொறுப்பாளரான சிரினிவாச தேரரினால் நிர்மானப்பணிகளின்போது வைப்பதற்கென பாதுகாப்பு செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூபியின் நாற்சதுரத்தினுள் வைப்புச் செய்வதற்காக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்ப படை வீரர்களினாலும் பல்வேறு பெறுமதிவாய்ந்த பெருட்களும் இந்த வைபவத்தின்போது வழங்கிவைக்கப்பட்டன.
யுத்ததின் போது காயமடைந்த, அங்கவீனமுற்ற மற்றும் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்த பதுகாப்பு செலயாலாளர் "இந்த தூபியின் கம்பீர தோற்றம் யுத்ததின் போது பல்வேறு தியாகங்கள் புரிந்த போர் வீரர்களுக்கான எமது அஞ்சலி" என தெரிவித்தார்.
இலங்கையை ஆண்ட பண்டைய மன்னர்கள் எமக்காக விட்டுச் சென்றதைப் போன்று நாமும் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது பெருமையை எடுத்துச் சொல்ல இந்த தூபி வழி வகுக்கும் என ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
மிக உயரமான தூபிகளில் ஒன்றான இந்த தூபியின் அரைக்கோள குவிமாடம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து நாற்சதுரத்திற்குள் புதையல் பொருள் வைக்கப்படுவதன் மூலம் அதன் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகும்.
இதனைத் தொடர்ந்து தூபியின் இதர பணிகளான நாற்சதுர பகுதி அமைத்தல், மணி மாடம் அமைத்தல், மகுடம் அமைத்தல், கலசம் அமைத்தல் மற்றும் இரத்தின கல் பதித்தித்தல் என்பன திட்டமிட்ட காலவரையறைக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றார்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட தியாகங்களை நினைவு கூறும் வகையில் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், கட்டுமான பணிகள் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மல்வத்து பீடத்தைச் சேர்ந்த அதி வண. ராஜகீய பண்டித கலாநிதி பஹமுனே தர்மகீர்த்தி ஸ்ரீ சுமங்கள தேரர், எட்டு புனித ஸ்தலங்களின் பொறுப்பாளரான அதி வண. கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்கள், வட மத்திய மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரி, வரைபட கலைஞர்கள், தொல்பொருளியலாளர்கள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.