திக்கோவிட்ட துறைமுகத்தில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
மார்ச் 30, 2021திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (29) பல நாள் மீன்பிடிநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகு ஒன்றில் ஏற்பட்ட தீயினை கடற்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த படகில் ஏற்பட்ட தீ, தீயணைப்பு வீரர்களினால் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அருகில் உள்ள படகுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
திக்கோவிட்ட கடலோர பாதுகாப்பு படை நிலையத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கடற்படையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கடற்படையின் தீயணைப்பு படையினர், கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் படையினர், திக்கோவிட்ட கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் மீன்பிடி துறைமுக மீனவர்கள் ஆகியோர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திக்கோவிட்ட கடலோர பாதுகாப்பு படை நிலையத்தின் உதவியுடன் காயமடைந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.