வன்னியில் வீட்டுத்தேவையுடைய இரு குடும்பங்களுக்கு வீடுகள்

ஏப்ரல் 18, 2019

அண்மையில் வன்னியில் இராணுவத்தினரால் இரு தனவந்தர்களின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் உரிமையாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் வவுனியா மாவட்ட கணேசபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ்விரு வீடுகளில் ஒன்றினை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இம்மாவட்டத்தில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட வீட்டுத்தேவையுடைய குடும்பத்தை சேர்ந்த மாணவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறு குடிசையில் வசித்துவரும் திருமதி. ஆர். நிவரசன (11) குடும்பத்தின் நிலை தொடர்பாக படையினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வீட்டுக்கான நிர்மாணப்பணிகள் 211 படைப்பிரிவின் 2 வது மேகனைஸ்ட் காலாட் படையணியின் தொழில்நுட்ப நிபுணத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், குறித்த மாணவருக்கு தனியார் நிபுணர்கள் இருவார் கல்வி உதவித்தொகையும் வழங்கியுள்ளனர்.

மேலும், வவுனியா பம்பைமடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீட்டினை அப்பகுதியில் சிறு குடிசையில் வசித்துவந்த வீட்டுத் தேவையுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்மாணப்பணிகளை 621 படைப்பிரிவின் 25 வது இலங்கை இலகு காலாட் படையணியினர் மேற்கொண்டுள்ளனர். இவ்வீட்டினை அண்மையில் (ஏப்ரல், 10 ) இடம்பெற்ற நிகழ்வின்போது வீட்டு உரிமையாளர் திரு. நாகராசா மூர்த்தியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இவ்வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகளின்போது, குடிநீர் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிகொள்ளும் குடும்பம் ஒன்றிற்கு சுமார் Rs. 100,000.00 பெறுமதியான இலக்றிக் குழாய்க் கிணறு ஒன்றும் வழங்கப்பட்டது. இதற்கான நிதியினை பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்ன அவர்கள் வழங்கியதுடன், 100 தென்னங் கன்றுகளையும் வழங்கியுள்ளார்.

இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வுகளில், வன்னி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.