--> -->

விமானப்படையினரால் தியுல்வெவ மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள்

மார்ச் 31, 2021

இலங்கை விமானப்படை அதன் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தியுல்வெவ பிரதேச மக்களுக்கான ஒரு குடிநீர் திட்டத்தை வைபவரீதியாக அண்மையில் கையளித்தது.

இந்த நிகழ்வு விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கப்படும் "குவன் மிதுதம்" திட்டத்தின் கீழ் மொறவெவ விமானப்படை நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கப்படும் "குவன் மிதுதம்" திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பல்வேறு தேவைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்துடன் இணைந்ததாக தியுல்வெவவில் உள்ள மொறவெவ யாய வித்தியாலயம் புனரமைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்வில், மொறவெவ விமானப்படை நிலைய கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.