யாழ் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்
ஏப்ரல் 01, 2021காங்கேசந்துறை, திஸ்ஸ ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றின்போது, யாழ்ப்பாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தின் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது,
இந்த நிகழ்வில் பெளத்த மத குருமார்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.