இராணுவத்தினரால் ரூ. 13.8 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது
ஏப்ரல் 01, 2021மன்னார், பேசலை கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 கிலோகிராம் கேரள கஞ்சா இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
மறைத்து வைக்கப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் யாரும் காணப்படாததனால் ரூ.13.8 மில்லியன் பெறுமதியான கஞ்சா. மேலதிக விசாரணைகளுக்காக பேசலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.