2021 ஆண்டுக்கான முதுமாணி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
ஏப்ரல் 01, 2021ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான முதுமாணி கற்கைகள் மார்ச் 30ம் திகதி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதற்கமைய, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முகாமைத்துவ முதுமாணி, விநியோக முகாமைத்துவ முதுமாணி, சட்ட முதுமாணி, பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கை முதுமணி, அனர்த்த அபாய தவிர்ப்பு மற்றும் அபிவிருத்தி திட்ட முதுமாணி ஆகிய கற்கை நெறிகளுக்காக 159 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கற்கைகளுக்காக வருகை தந்த புதிய மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் வரவேற்றார்.
இங்கு பயிலும் மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திகொள்வதற்கான வாய்ப்பு , அணுகுமுறைகளை மாற்றுதல் மற்றும் பிரச்சனைகளை கையாளும் அணுகுமுறைகள் கண்டுபிடித்தல் உள்ளிட்ட நவீன தொழிநூட்ப மற்றும் கற்பித்தல் முறைகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
பட்டதாரிகள் கற்கை பீடமும் இந்த முதுமாணி கற்கை நெறிகளை பெரிதும் வரவேற்றுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட, சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
அத்துடன் இது சர்வதேச பல்கலைக்கழகங்களின் சங்கம் மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் ஒன்றிணைக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும்.