பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

ஏப்ரல் 05, 2021

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு மலேய் வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இன்று (ஏப்ரல் 05) விஜயம் செய்தார்.

பாதுகாப்புச் செயலாளரின் இந்த விஜயத்தின் மேற்படி கல்லூரியின் கணிஷ்ட பிரிவு நூலகம், செயற்பாட்டு அறைகள், தங்குமிடம் மற்றும் ஆரம்ப பிரிவு உப அதிபர் அலுவலகம் என்பவற்றை மேற்பார்வை செய்தார்.

இங்கு நிர்மானிக்கப்பட்டுவரும் கல்லூரியின் விடுதி நிர்மாண பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்ட அவர், இந்த திட்டத்தை விரைவாக முடிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷனா பதிரன, கல்லூரியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூ. ஆர். பலிஹக்கர (ஓய்வு), கல்லூரி அதிபர் நிரோஷன் ஓபாத, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹசினி தலகல மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.