சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கடற்படையினரால் கைது

ஏப்ரல் 08, 2021

சிலாவத்துறை, கொண்டச்சிகுடா தெரு மேற்கொள்ளப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்துக்கிடமான நான்கு முச்சக்கர வண்டிகளில் பயணித்த குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் சிலாவத்துறை கொண்டச்சிகுடா வீதித்தடையில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெளிநாடு ஒன்றுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் சிலாவத்துறை கடற்பரப்பை நோக்கி பயணித்த வேளையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மன்னார் வாழைச்சேனை வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 14 ஆண்களும் நான்கு பெண்களும் ஒரு சிறுவன் மற்றும் சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டிகள் ஆகியன மேலதிக சட்டநடவடிக்கை எடுக்க சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.