பணயக்கைதிகள் மீட்புப் பணிகள் தொடர்பாக இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பு

ஏப்ரல் 08, 2021

பணயக்கைதிகளை மீட்டல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளல் பாடநெறி மற்றும் போர் நடவடிக்கைகளில் மோப்ப நாய்களை பயன்படுத்தல் தொடர்பான உயர் தர பாடநெறிகளை வெற்றிகரமாத பூர்த்தி செய்த இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் நேற்று (ஏப்ரல் 7) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கான அடையாள சின்னத்ததைப் பெற்றுக்கொண்டனர்.

அடையாளச் சின்னங்களை அணிவிக்கும் நிகழ்விற்கு கொமாண்டோ படையணியின் கேர்ணல் ஒப் த ரெஜிமெண்ட்டும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படையின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்'

பணயக்கைதிகளை மீட்டல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளல் முதற்கட்ட பாடநெறியில் 56 கொமாண்டோக்களும், போர் நடவடிக்கைகளில் மோப்ப நாய்களை பயன்படுத்தல் தொடர்பான உயர் பாடநெறிகளில் 32 படை வீரர்களும் கொண்டு தேர்ச்சி பெற்றனர்.

இரு பாடநெறிகளையும் பூர்த்தி செய்த விஷேட கொமாண்டோக்களினால் செய்முறை விளக்க ஒத்திகை காட்சிகளும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவத்தின் பிரதம அதிகாரி, பிரதி இராணுவ பிரதம அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.