சீன தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு விஜயம்
ஏப்ரல் 09, 2021பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சீன தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மலே வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கான விஜயம் ஒன்றினை இன்று (ஏப்ரல், 09) மேற்கொண்டனர்.
இதற்கான பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத் தொகுதியினை இலங்கைக்கான சீன தூதுவர் அதிமேதகு கீ ஜென்ஹோங்
மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதன்போது, பாடசாலை மாணவர் எஸ் மற்றும் பாடசாலை உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தூதுவர்ஜென்ஹோங் வழங்கிவைத்தார்.
மேலும், பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சீன தூதரக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்த விஜயத்தின் போது சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங்க், பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பணிப்பாளர் மேஜர் ஜெனால் பலிகக்கார (ஓய்வு) , கல்லூரியின் அதிபர் நிரோஷன் ஓபதா, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.