சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்

ஏப்ரல் 09, 2019

எதிர் வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 09) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இன்று காலை வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.

இச்சந்தையில், காய்கறிகள், பழங்கள், உள்நாட்டு அரிசி வகைகள், மாவு மற்றும் பருப்புவகைகள், பண்ணை உற்பத்திப்பொருட்கள், தைத்த ஆடைகள், காலணிகள் மற்றும் ஏனைய மலிகை பொருட்கள் என்பன நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள்ஆகியோரினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

புதுவருட சந்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்கேஜிகே நெம்மேவத்த, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.