யாழில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு

ஏப்ரல் 13, 2021

யாழ் கிராண்ட் பஸார் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இந்து சமய சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெற்ற சிறிய வைபவத்தின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கடமையில் உள்ள முப்படை வீரர்களுக்கு தனது புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவியை சுபவேளையில் வீட்டு உரிமையாளரான திருமதி கருணாநிதி ஜெகதீஸ்வரனிடம் கையளித்தார்.

யாழ் பிரதேச செயலகத்தினால் நிதியுதவி அளிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு இராணுவத்தினரால் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் என்பன வழங்கப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.