இந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஏப்ரல் 15, 2021

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ரன்விஜய் 'மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று (ஏப்ரல்,14) வந்தடைந்தது.

துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்கரை மரபுக் அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

ரன்விஜய் கடற்படை கப்பலானது இந்திய கடற்படையில் சேவையாற்றும் நாசகாரி ரக கப்பல் வகையைச் சேர்ந்த ஒரு கடற்படை கப்பல் ஆகும். இது146.2 மீட்டர் நீளம் கொண்டதும் சுமார் 425 கடற்படை வீரர்கள் பயணிக்கக்கூடிய இடவசதியை கொண்ட கப்பல் என கடற்படை தெரிவித்துள்ளது.