வெலு ஓயாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரின் உடல்கள் படையினரால் மீட்பு

ஏப்ரல் 16, 2021

ஹல்டும்முல்லவில் உள்ள வெலு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் அவரது மகனின்
உடல்கள் படையினரால் இன்று (ஏப்ரல் 16) காலை மீட்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படைவீரர்களால் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கான விடுமுறை நாட்களில் பதுள்ளை நோக்கிய பயணத்தின் போது அவர்கள் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் அருகில் இல்லாதபோது, ​​தந்தை, தனது மகனுடனும் மகளுடனும் நீரோடையில் நீராட முடிவு செய்துள்ளார்.

பின்னர், மலையகத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் இவ்விரு ஆண்களையும் அடித்துச் சென்ற அதேவேளை, அவர்களின் மகள் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட 18 மணிநேர நீண்ட தேடல் நடவடிக்கையைத் தொடர்ந்து தாழ் நில பகுதியில் இருந்து காணாமல் போன இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.