போர் வீரர்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் புத்தாண்டு
ஏப்ரல் 19, 2021“சுபீட்சத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேசமயம், திறமையாக செயல்படுவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கும் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் முப்படையினரின் சுறுசுறுப்பானசெயற்பாடுகள் என்பன காரணமாக நாட்டில் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்ததாகவும் இதற்காக செயலாற்றிய அனைவருக்கும் தான் நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளை அவர்களின் வாழ்நாள் பூராகவும் கொடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ராணி குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.